ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் தனக்கு ஆதரவளிக்காத ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்தைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நாடுகள் சீனா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்களைத் தொடர்ந்து ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் புதன்கிழமை (பிப். 25) சீனாவின் தலைநகர் பெஜிங்கிற்கு 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், முதல்முறையாக சீனா சென்றுள்ள அவர் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து உரையாடுவார் எனவும், இருநாடுகளிடையே சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உலகளவிலான மிகப் பெரிய அரசியல் பிரச்னைகளை சீனாவின் ஈடுபாடின்றி முடிவுக்குக் கொண்டுவர முடியாது எனவும், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட நெருக்கடிகள் மற்றும் போர்களைத் தீர்க்க சினாவின் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜெர்மனியின் பிரதமர் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீனாவின் முதன்மை நிறுவனங்களின் தொழிற்சாலைகளைத் தங்களது நாடுகளில் அமைக்க வேண்டுமென பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
German Prime Minister Friedrich Merz has paid a state visit to China.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிட்டால் பதற்றம் அதிகரிக்கும்: சீனா

ஹோர்முஸ் முற்றுகை! அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



