ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிடுவது பதற்றத்தை அதிகரிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
மேற்காசியப் போரில் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் விதமாக ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிடுவது பதற்றத்தை அதிகரிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளார் குவோ ஜியாகுன் இதுபற்றி பேசுகையில், ”ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் பதற்றத்தைத் தணிக்காமல் அதை மேலும் அதிகரிக்கும்.
அமெரிக்கா ராணுவம் ஈரான் துறைமுகத்தை முற்றுகையிடுவது ஏற்கனவே பலவீனமாக உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் சீர்குலைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த நான்கு அம்ச கட்டமைப்பு நடவடிக்கைகளை சீன அதிபர் ஷி ஜின்பிங் முன்மொழிந்துள்ளதாக செய்தி வெளியானது.
இந்த முன்மொழிவில் அமைதியான சகவாழ்வுக்கான மரியாதை, தேசிய இறையாண்மை, சர்வதேச சட்டம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசருடன் பெய்ஜிங்கில் நடந்த சந்திப்பின்போது சீன பிரதமர் இந்த முன்மொழிவு பற்றி விவரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பல் உள்பட சுமார் 15 கப்பல்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தக் கப்பல்கள் எங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி சரியான விவரங்கள் வெளியாகவில்லை.
சில நாள்களுக்கு முன் பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க அதிபர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
US blockade on Iranian ports will worsen tensions says china
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

அமெரிக்கா - ஈரான் இடையே 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?
ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்! சீனா எதிர்ப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


