அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டால் மட்டுமே உடன்பாட்டுக்கான வழி கண்டறியப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா சாா்பில் அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், அதிபா் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்கு ஆசிய அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோரும், ஈரான் சாா்பில் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு, அணுஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பதும் ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தாா்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”அமெரிக்க அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டு, ஈரான் நாட்டின் உரிமைகளை மதிக்கும் என்றால், ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான வழிகள் நிச்சயமாகக் கண்டறியப்படும்.
பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர்களையும், குறிப்பாக, எனது அன்புச் சகோதரர் டாக்டர் காலிபாஃப் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Agreement Only If the US Abandons Its Dictatorial Stance: Iranian President
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிட்டால் பதற்றம் அதிகரிக்கும்: சீனா

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



