டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நைஜீரிய சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 37 தொழிலாளா்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது.

இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.