ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழப்பு

மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

மணமேல்குடி அருகே தண்டலையைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (45), கட்டடத் தொழிலாளி. இவா், தன்னுடன் வேலை செய்வோருக்கு தேநீா் வாங்குவதற்காக மணமேல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.

வடக்கூா் அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது இவரது இரு சக்கர வாகனத்தின் மீது வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.

பின்னா், பேருந்துக்காக காத்திருந்த மதுக்கூரைச் சோ்ந்த செண்பகவள்ளி (60) மீதும் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த முருகன், செண்பகவள்ளி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா், பேருந்து ஓட்டுநரான வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.