/

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா - சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி..?

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா: பிரதமர் மோடி வருகையை எதிர்பார்க்கும் வங்கதேச தலைவர்கள்...

News image
- ANI
Updated On :14 பிப்ரவரி 2026, 3:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை வங்கதேச தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வங்கதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்தில் அரியணையேற உள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மூத்த தலைவர்களுள் ஒருவரான ஏஎன்எம் எசானுல் ஹோக் மிலன் பேசுகையில், மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார். தலைநகர் தாக்காவில் சனிக்கிழமை(பிப். 14) செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், பதவியேற்பு விழாவுக்கு ஆசிய தலைவர்கள் அழைக்கப்படுவரா என்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “பிரதமர் மோடி கட்டாயம் அழைக்கப்பட்ட வேண்டும். தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சித் தலைமை அழைப்பு விடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவே பொது மரபு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதைச் செய்வார்கள்.

ஒட்டுமொத்த உலகமும் எங்களுடன் இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவருக்கும் நண்பர்கள்; எவருக்கும் பகைவர் அல்ல!” என்றார்.

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா அடுத்த 4 நாள்களில் நடைபெறும் என்று அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

summary

"PM Modi should be invited": BNP leader hopes for India's presence at swearing-in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.