டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வங்கதேசம் செல்வாரா பிரதமர் மோடி? பிப். 17-இல் புதிய அரசு பதவியேற்பு விழா!

பிரதமர் மோடி வங்கதேசம் செல்வதில் சிக்கல்...

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 7:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்தில் அரியணையேற உள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமைச்சரவை பதவியேற்பு விழா பிப். 17-இல் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

வங்கதேச புதிய பிரதமராக மறைந்த முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகனும் பிஎன்பி தலைவருமான தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ளார். இவ்விழா வங்கதேச நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பிற்பகல் நடைபெறும் என்று பிஎன்பி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கு இந்தியா உள்பட சீனா, சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு ஆமீரகம், கத்தார், மலேசியா, புரூனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பிரதமர் மோடி வங்கதேசம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவுக்கு திங்கள்கிழமை(பிப். 16) வருகை தரும் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், மும்பையில் செவ்வாய்க்கிழமை(பிப். 17) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்வுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இரு தலைவர்களும் தில்லியில் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஏ.ஐ. 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப். 17-இல் நடைபெறும் வங்கதேச அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதில் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.