டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பன்னுன் கொலை முயற்சி: அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா!

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டா நிகில் குப்தா..

News image
குா்பந்த்வந்த் சிங் பன்னுன்- ANI
Updated On :14 பிப்ரவரி 2026, 4:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

காலிஸ்தான் பிரிவினைவாதி என அழைக்கப்படும் குா்பந்த்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்தியர் நிகில் குப்தா, அமெரிக்க நீதிமன்றத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியா்கள்’ என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற இவரை, அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாகவும் அந்நாட்டின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக இந்தியரான நிகில் குப்தா (54) கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சியில், இந்தியரான நிகில் குப்தா வெள்ளிக்கிழமை தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்குரைஞர் அலுவலகம் உறுதிசெய்திருக்கிறது.

நேற்று மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜரான 54 வயதான குப்தா, பன்னுனைக் கொலை செய்ய கடந்த 2023 ஆம் ஆண்டின் மத்தியில், ஒரு கொலையாளி என்று தான் கருதிய ஒருவருக்கு 15,000 அமெரிக்க டாலர்களைக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை முயற்சி வழக்கில், இந்திய அரசு சார்பில், பன்னுன் கொலைக்காக பணியமர்த்தப்பட்டவர்தான் இந்த நிகில் குப்தா என்று அமெரிக்க சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், இது மத்திய அரசின் கொள்கைகளுக்கு முரணானது என்று இந்தியா வாதத்தை முன்வைத்துள்ளது.

கொலை செய்ய பணம் கொடுத்தல், கொலை செய்ய சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும், இவை அனைத்தும் சேர்த்து அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நிகில் குப்தாவுக்கு வரும் மே 29ஆம் தேதி அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மர்ரெரோ தண்டனை விவரங்களை அறிவிக்கவிருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.