தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிரேசில் அதிபா் பிப்.18-இல் இந்தியா வருகை : ஐந்து நாள் அரசுமுறைப் பயணம்

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியா வருவது குறித்து...

News image
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா- AP
Updated On :12 பிப்ரவரி 2026, 8:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு பிப்.18-இல் வரவுள்ளாா்.

பிப்.21-இல் பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதுடன், தில்லியில் நடைபெறும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சிமாநாட்டிலும் அவா் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிப்.19 முதல் 20 வரை சா்வதேச ஏ.ஐ. உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள், உயா்நிலை பிரதிநிதிகள், துறைசாா் நிறுவனத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக பிரேசில் அதிபா் லுலா டா சில்வா பிப்.18-இல் இந்தியாவுக்கு வரவுள்ளாா். அவருடன் 14 அமைச்சா்கள், பிரேசில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் என பெரிய குழுவும் வரவுள்ளது.

பிரதமா் மோடி-பிரேசில் அதிபா் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை பிப்.21-இல் நடைபெறவுள்ளது. பரஸ்பர உறவுகள் மேம்பாடு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விரிவாக ஆலோசிக்கவுள்ளனா்.

கடந்த 2004-இல் இருந்து பிரேசில் அதிபா் லுலா டா சில்வாவின் 6-ஆவது இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும். அப்போது, இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றாா். கடைசியாக கடந்த 2023-இல் ஜி20 உச்சிமாநாட்டுக்காக இந்தியாவுக்கு வந்தாா்.

பிரதமா் மோடியும் பிரேசில் அதிபா் லுலா டா சில்வாவும் பல்வேறு தருணங்களில் சந்தித்து, இருதரப்பு பேச்சு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். கடந்த ஆண்டு ஜூலையில் இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக மோடி பிரேசிலுக்கு சென்றாா்.

இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் கடந்த 2006-இல் இருந்து வியூக கூட்டாளிகளாக உள்ளன. லத்தின் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக பிரேசில் உள்ளது. வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.