டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: 80 வது முறை டிரம்ப் பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என டிரம்ப் கருத்து...

News image
டொனால்ட் டிரம்ப்- படம் - ஏபி
Updated On :11 பிப்ரவரி 2026, 6:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இதுபோன்று அவர் கூறுவது 80 வது முறை.

வரி விதிப்பின் மூலம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வணிக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், இதுவரை 8 போர்களை தலையிட்டு நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 6 போர்கள் வரி விதிப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக டிரம்ப் பேசியதாவது:

''உலகில் இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன். நீங்கள் போர்களை நிறுத்தாவிட்டால், வரி விதிப்பை அதிகரிப்பேன். ஏனெனில் மக்கள் கொல்லப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் குறித்துப் பேசிய டிரம்ப், ''இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் எல்லை மீறி இருந்தது. என் கருத்துப்படி, இது அணு ஆயுதப் போராகவும் மாறியிருக்கும். போரில் கிட்டத்தட்ட 10 விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்தப் போரை நிறுத்தியதில் வரி விதிப்பு முக்கியப் பங்காற்றியது. இந்தப் போரை நிறுத்தியதன் மூலம் ஒரு கோடி உயிர்களைத் தான் காப்பாற்றியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். அவருக்கு நான் பதிலளித்தேன்'' என டிரம்ப் குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மூன்று அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை 80 முறை பல்வேறு இடங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில், மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.