/

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகியின் வைரலாகும் பேச்சு குறித்து...

News image
கிராமி விருது மேடையில் சகோதரருடன் பில்லி ஐலீஷ். - படம்: ஏபி
Updated On :3 பிப்ரவரி 2026, 10:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026 கிராமி விருது: கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலீஷின் (24 வயது) பேச்சு சமூக வலைதளத்தில் ஆதரவும் எதிர்ப்புமாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமைக்கு எதிரான தனது கருத்தினை விருது விழாவில் கூறிய அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

எதற்கு விருது, என்ன சர்ச்சை?

கடந்த பிப்.1ஆம் தேதி நள்ளிரவு லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த விழாவில் அமெரிக்க பாடகரும் எழுத்தாளருமான பில்லி ஐலீஸுக்கு 2025-ன் சிறப்பான பாடலுக்கான கிராமி விருது வழங்கப்பட்டது.

’வைல்டுபிளவர்’ என்று எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. இது அவரது 10-ஆவது கிராமி விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்பட 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற விரும்பும் மக்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியே மேற்கண்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் மக்களுக்கு விசா வழங்குதல் நிறுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை வரும் ஜன. 21 முதல் அமலுக்கு வந்தது.

பில்லி ஐலீஷ் பேசியது என்ன?

இந்நிலையில், விருது விழாவில் பில்லி ஐலீஷ் பேசியதாவது:

விருதுக்கு மிகவும் நன்றி. உண்மையிலேயே எனக்கு எதுவும் சொல்ல வேண்டுமெனத் தோன்றவில்லை. ஆனால், திருடப்பட்ட இடத்தில் யாருமே சட்டத்துக்குப் புறம்பானவர்கள் இல்லை. ஐசிஇயை வெறுக்கிறேன்.

இப்போது என்ன பேசுவதென்றும் செய்வதென்றும் தெரியவில்லை. இந்த அறை எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.

நாம் தொடர்ந்து பேச வேண்டும், போராட வேண்டும் என நினைக்கிறேன். மக்களைப் போலவே நமது குரல் மிகவும் முக்கியமானது. மிகவும் நன்றி எனப் பேசினார்.

பில்லி ஐலீஷின் இந்தப் பேசுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளத்தில் பெருகி வருகின்றன.

summary

No one is illegal on stolen land’: Billie Eilish shares pro-immigration message at Grammys 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.