டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராமி விருதில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ட்ரிக்!

அமெரிக்க ராப் இசைக் கலைஞர் கென்ட்ரிக் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image
கிராமி விருது வென்ற கென்ட்ரிக். - படம்: ஏபி
Updated On :3 பிப்ரவரி 2026, 11:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026 கிராமி விருது: அமெரிக்க பாப் இசைக் கலைஞர் கென்ரிக் லாமர் இந்தாண்டு ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

கிராமி விருது வரலாற்றிலேயே அதிக விருதுகள் பெற்ற ராப் இசைக்கலைஞராக கென்ரிக் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் கடந்த பிப்.1ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றன.

இந்த விழாவில் பாப் இசைக் கலைஞர் கென்ரிக்கு (38 வயது) ஐந்து பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆல்பம், ரெகார்ட் ஆஃப் த இயர், சிறந்த மெலோடிக் ரேப் இசை, சிறந்த ராப் இசை, சிறந்த ராப் இசை நடனம் என ஐந்து பிரிவுகளில் வழங்கப்பட்டன.

இதுவரை, மொத்தமாக 66 பிரிவுகளில் போட்டியிட்ட கென்ரிக் லாமர் 27 விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன்பாக அதிகபட்சமாக ஜே-இசட் என்ற ராப் இசைக் கலைஞர் 26 விருதுகளைப் பெற்றிருந்தார்.

இந்தாண்டு விருது வென்ற கென்ரிக் பேசியதாவது:

இது எப்போதுமே ஹிப்-ஹாப்தான் நண்பா. என்னைப் பற்றி பேசுவதில் நான் சிறப்பானவன் இல்லை. ஆனால், அதை இசை வழியாக சரியாக வெளிப்படுத்துவேன்.

எப்போதுமே இதைச் சொல்லுவேன் - ஹிப் ஹாப் எப்போதுமே இங்குதான் இருக்கும். நாங்கள் இந்த மேலங்கியுடனேதான் இருப்போம்.

நாங்கள் பார்க்க நன்றாக இருப்போம். எங்களுடன் எங்கள் மக்கள் எப்போதும் இருப்பார்கள். இந்தக் கலாசாரத்துடனேதான் இருப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.