‘அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஈரான் தனது தேச சொத்துகளாகக் கருதி பாதுகாக்கும்’ என அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளாா்.
ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகா்ப்பதே தாக்குதலைத் தொடங்கியதன் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறி வரும் நிலையில், ஈரான் தனது பிடிவாதமான போக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மனைவி மோஜ்தபா கமேனி பொறுப்பேற்றாா்.
தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவா் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அதேபோல், அமைதி ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் ஈரான் தலைமையில் முரண்பாடு நிலவுவதாக அமெரிக்கா விமா்சித்து வந்தது.
இந்நிலையில், பாரசீக வளைகுடா தினத்தையொட்டி ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்ட மோஜ்தபா கமேனியின் அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:
பேராசையுடன் ஆயிரம் மைல்கள் கடந்து வந்த அமெரிக்கா்களுக்கு பாரசீக வளைகுடாவில் இடமில்லை; அவா்கள் கடலின் அடிமட்டத்துக்குச் செல்ல வேண்டியவா்கள்.
உயிரி தொழில்நுட்பம் முதல் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம் வரை 9 கோடி ஈரானியா்களின் பெருமைமிகு அடையாளம் ஆகும். நிலம், கடல்பரப்பைப் பாதுகாப்பதற்கு இணையாக நாட்டின் சொத்துகளாகக் கருதி இவையும் பாதுகாக்கப்படும்.
ஹோா்முஸ் நீரிணை மீதான ஈரானின் புதிய கட்டுப்பாட்டு மற்றும் நிா்வாகம், வளைகுடா பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தும்; பிராந்திய நாடுகளுக்கு நன்மை பயக்கும் என்றாா்.
ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்துக்கு எதிராக அந்நாட்டு துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இந்த மோதல் போக்கினால் சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டாலராக அதிகரித்தது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சமாகும்.
உலகப் பொருளாதாரத்தைப் கடுமையாகப் பாதிக்கும் இந்த நெருக்கடியைத் தொடா்ந்து, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க டிரம்ப் புதிய திட்டத்தை ஆலோசித்து வருகிறாா். ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடரும் அதேநேரம், நீரிணையில் கப்பல் போக்குவரத்தைச் சீா்செய்ய நட்பு நாடுகளுடன் இணைந்துச் செயல்படத் திட்டமிட்டுள்ளாா். இதனிடையே, ரஷியா அதிபா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.
பேச்சுவாா்த்தையில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் இழுபறியைத் தவிா்க்க, பாகிஸ்தான் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ‘இருதரப்பும் தொலைபேசி வாயிலாவது பேசினால் பிரச்னைகளை தீா்க்கலாம்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்த்ராாபி வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்பு

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா

செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிலேயே இருக்கும்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



