ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் உள்ள மோயர்ஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. அங்கு ஞாயிறன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
குருத்வாராவின் நிதி மற்றும் நிர்வாக தொடர்பான பிரச்னையில் சீக்கியர்களின் இரு பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ஜெர்மன் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், குருத்வாராவில் நீண்ட நாள்களாக முன்னாள் கமிட்டி நிர்வாகிகளுக்கும் தற்போதுள்ள நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
சீக்கியர்களுக்குச் சொந்தமான நிதி கையாடல் தொடர்பாகவும் அவர்களுக்குள் பிரச்னை எழுந்த நிலையில் குருத்வாரா மீதான கட்டுபாடு மற்றும் செல்வாக்கு முக்கியப் பிரச்னையாகக் இருந்துள்ளது.
இதன் காரணமாக சீக்கியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் மிளகு ஸ்பிரே, கத்திகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அருகிலிருந்து பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 100 அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுபற்றிய விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
Summary
11 injured in clash at gurdwara in Germany
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

