காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் கிளர்ச்சிப் படையை இந்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் வர்மா மற்றும் ஹிந்து மதத் தலைவர்கள் கௌரங்க தாஸ் பிரபு உள்ளிட்ட தேஜகூ தலைவர்களுடன் இஸ்ரேலிய அமைச்சர் கிடியான் சார் வியாழக்கிழமை (ஏப். 16) அன்று காணொலி வாயிலாக உரையாடினார்.
இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகளை வலுப்படுத்து குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடந்த 2.5 ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இஸ்ரேலிய அமைச்சர் கிடியான் சார் எடுத்துரைத்தாகக் கூறப்பட்டுள்ளது.
அப்போது, அவர் பேசியதாவது:
“ஹமாஸ் அமைப்பை இந்தியா பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டிய முக்கியத்தும் குறித்து நான் வலியுறுத்தியுள்ளேன். லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஹமாஸுக்கு தொடர்பு இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Israeli Minister Gideon Sa'ar has called upon the India to designate the Hamas as a terrorist organization.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

துருப்புச் சீட்டு ஈரான் கையில்...

காஸாவில் கொல்லப்பட்ட சிறுமி குறித்த படத்துக்குத் தடை! மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



