மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை இன்றே முற்றுகையிடுவதாக டிரம்ப் அறிவித்தது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Updated On :13 ஏப்ரல் 2026, 3:30 am

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் இன்றே முற்றுகையிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசியதாவது:

“ஈரான் மிக மோசமான நிலையிலும், விரக்தியிலும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்களா? இல்லையா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை.

அவர்களின் ராணுவ பலம் அழிந்துவிட்டது. அவர்களின் ஏவுகணைக் கையிருப்புகள் பெருமளவில் தீர்ந்துவிட்டன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் அவர்களின் திறன் பெருமளவில் முறியடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கான பாலங்களை முற்றிலுமாக உடைத்துவிடவில்லை.

அவர்கள் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்போம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்களின் முழுக் கடற்படையும் நீரில் மூழ்கிவிட்டது. ஈரானின் 158 கப்பல்களை அழித்துவிட்டோம். திங்கள்கிழமை காலை 10 மணி முதல் ஹோர்முஸ் நீரிணை முற்றுகை அமலுக்கு வரும். ரஷியா மற்றும் செளதி அரேபியாவைவிட அமெரிக்காவிடம் அதிக கச்சா எண்ணெய் உள்ளன. தற்போது பல நாடுகளின் சரக்கு கப்பல்கள் அமெரிக்க கடற்கரையை நோக்கி எண்ணெய்க்காக வந்து கொண்டுள்ளன” என்றார்.

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் கிறிஸ்துவ மதத் தலைவர் 14 ஆம் போப் லியோவின் கருத்துகள் பற்றி டிரம்ப் பேசியதாவது:

“அவர் சிறப்பாகச் செயல்படுவதாக நான் கருதவில்லை. அவருக்கு குற்றச்செயல்கள் மீது விருப்பம் என்று நினைக்கிறேன். அணு ஆயுதம் வைத்திருப்பது சரி எனக் கூறும் போப்பை நாங்கள் விரும்பவில்லை. நான் போப் லியோவின் ஆதரவாளர் இல்லை” எனத் தெரிவித்தார்.

Summary

Strait of Hormuz Blockaded Today! Trump Announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.