பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் செய்த சிறு பிழை, ஈரான் - அமெரிக்கப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, அவர் கோரிக்கை வைக்கும் விதத்தில் ஒரு எக்ஸ் பதிவை அவர் இன்று வெளியிட்டிருந்தார். ஆனால், அதில், டிராஃப்ட் என்ற வார்த்தையும், பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் பதிவு என்றும் தவறுதலாக பேஸ்ட் ஆகியிருந்தது.
எனவே, இந்த பதிவு, பாகிஸ்தான் பிரதமரால் எழுதப்பட்டது அல்ல, அவருக்கு யாரோ எழுதிக்கொடுத்து, அதனைத்தான் அவர் பதிவிட்டு வருகிறார் என்ற சந்தேகத்தை வலுவாக்கியிருக்கிறது
ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ஷெபாஸ் கோரிக்கை விடும் வகையில் அந்த பதிவு இருக்கிறது. ஆனால், அதன் எடிட் ஹிஸ்டரியில் சென்று பார்த்தால், அதன் முதல் வாக்கியமாக டிராஃப்ட் என்பது இடம்பெற்றிருக்கிறது.
யார் ஒருவரும், தன்னுடைய கருத்தைப் பதிவிடும்போது, இந்நாட்டின் பிரதமர் என்று தொடங்கி எழுதுவது வழக்கமல்ல. ஆனால், ஒருவர் மற்றொருவருக்கு எழுதிக் கொடுக்கும்போது, அவ்வாறு எழுதிக் கொடுப்பார்கள். ஆனால், தவறு எங்கே நேர்ந்தது என்றால், அதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தபோதுதான்.
இந்த சம்பவத்தின் மூலம், பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்கள் வலுத்திருப்பதோடு, பாகிஸ்தான் அரசு, தன்னுடைய சுயமான செய்திகளைக் கூட, யாரோ ஒருவரின் அனுமதி பெற்றுத்தான் பதிவு செய்யும் நிலையில் இருப்பதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க போரில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலுக்குப் பிறகுதான், பாகிஸ்தான் அமைதி திட்டத்துடன் உள்ளே வந்திருக்குமோ, பாகிஸ்தானின் அனைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காதான் சாவியாக இருந்திருக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Summary
Copy-paste gone wrong in x page, Who is the Pakistani Prime Minister recording what he wrote?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

விடுகதைகள்

திமுக, அதிமுக கூட்டணிகளில் யார் ஹேப்பி? யார் அப்செட்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



