அள்ளமுடியும்; ஆனால், கிள்ளமுடியாது. அது என்ன?
விடை: தண்ணீர்
தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். அது என்ன?
விடை: நெருப்பு
நூல் நூற்கும், ராட்டை அல்ல; ஆடை நெய்யும், தறியும் அல்ல. அது என்ன?
விடை: சிலந்தி
சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான். அவன் யார்?
விடை: செங்கல்
மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி. அவன் யார்?
விடை: வெங்காயம்
பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்கமுடியவில்லை. அது என்ன?
விடை: முதுகு
அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
விடை: காற்று
ஏழை படுக்கும் பாய், எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை. அது என்ன?
விடை: பூமி
பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம். அது என்ன?
விடை: வானம்
பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப்பட்டையை நீக்கி, முன்னே வர்றாள் சீமாட்டி. அவள் யார்?
விடை: வாழைப்பூ
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...

தவறாகிப் போன காப்பி-பேஸ்ட்! யார் எழுதிக் கொடுத்ததை பதிவு செய்கிறார் பாகிஸ்தான் பிரதமர்?

ஈரமான இதயங்களே உலகின் அழகு!

இன்று ஒன்று நன்று
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


