ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாதென எச்சரிக்கை

News image

டெல் அவிவ் நகரில் தாக்குதல் | இஸ்ரேல் - படம்|AP

Updated On :24 ஜூன் 2025, 12:45 pm

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.

கடந்த இரு வார காலமாக மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை நீடித்தது. அதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை மிகத்துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை(ஜூன் 23) இரவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதாக திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், அதன்பின்னர், ஈரான் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டை சுமத்தியது.

இந்தநிலையில், அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கையை இன்று(ஜூன் 24) விடுத்துள்ளார். அதில், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.

'போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் - ஈரானின் செயல்பாடுகள் மிகப்பெரிய விதிமீறல் நடவடிக்கையாகும். இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று டிரம்ப் தமது சமூகவலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டு கறாராக எச்சரித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: ”இஸ்ரேல், இனி குண்டுகளை வீசாதீர்கள். இதை நீங்கள் தொடர்ந்தால், அது மிகப்பெரியதொரு விதிமீறலாகவே கருதப்படும். உங்கள் விமானிகளை இப்போதே தாயகத்துக்கு திரும்பச் செய்யவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் டிரம்ப் தொலைபேசி வழியாக பேசியுமுள்ளார்.

அதன்பின், டிரம்ப் கூறியிருப்பதாவது: ”இஸ்ரேல் இனி ஈரானில் தாக்குதல் மேற்கொள்ளாது. ஈரானை நோக்கிச் சென்ற இஸ்ரேலின் போர் விமானங்கள் அனைத்தும் திரும்பி இஸ்ரேலுக்கே வரவுள்ளன. ஆகவே, யாரும் இனி துன்புறமாட்டார்கள். போர் நிறுத்தம் உடனடியாக அமலாகிறது! மிக்க நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேல் அரசு ஊடகம் மூலம் தெரிவித்திருப்பதாவது: ”பரிசோதனை முறையிலான போர் நிறுத்தம் இரவு 7 மணிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், இஸ்ரேல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது. அப்போது ஈரான் தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படாவிட்டால் இஸ்ரேல் தரப்பிலிருந்து கடைப்பிடிக்கப்படும் போர் நிறுத்தம் மேலும் கால நீட்டிப்பு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொருபுறம், போர் நிறுத்தம் குறித்து ஈரானின் உயர்நிலை தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருப்பதாவது:

ஈரானின் ராணுவ அழுத்தத்தால் இஸ்ரேல் தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு தாக்குதலை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஈரான் படைகள் மிக எச்சரிக்கையுடனே இருக்கும். எவ்வித தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.