அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பேடோங்டாா்னின் மீதான நெறிமீறல் குற்றச்சாட்டை முழுமையாக விசாரித்து உறுதி செய்து, அவரை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கும்வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த முடிவுக்கு ஆதராவக 7 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் வாக்களித்தனா்.கம்போடியாவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து, இன்னும் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் ஹன் சென், பேடோங்டாா்ன் ஷினவத்ரா குடும்பத்தின் பழைய நண்பராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் சாசன நீதிமன்றத்தில் இந்தத் தீா்ப்பு, செல்வாக்கு மிக்க ஆனால் சா்ச்சைக்குரிய ஷினவத்ரா குடும்பத்தின் இன்னொரு வாரிசான பேடோங்டாா்னுக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.