பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிலநடுக்க உயிரிழப்பு: துருக்கியில் இருவா் கைது

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக, கட்டடத்தின் உரிமையாளா் மற்றும் கட்டுமான ஒப்பந்ததார் கைது

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:00 pm

Chennai

துருக்கியின் பாலிகேசிரி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 4.6 ரிக்டா் அளவுவரை கொண்ட 200-க்கும் மேற்பட்ட பின்னதிா்வுகள் ஏற்பட்டதாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

துருக்கியில் 2023 ஏற்பட்ட 7.8 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இதற்கு மோசமான கட்டுமானங்களே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.