பெய்ஜிங்: சீனாவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 48 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், முன்யோசனையுடன் செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு குவிகிறது.
வாங் ஜியாங்னன் என்ற டிரக் ஓட்டுநர், கடந்த புதன்கிழமையன்று, குவாங்டாங் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இப்பகுதி சீனாவின் மிகப்பெரிய வணிக மண்டலமாக விளங்குகிறது.
காலை 2 மணியளவில் எதிர்திசையில் அதிகமான வாகனங்கள் செல்வதையும், அவர்கள் சாலையில் உடைப்பு ஏற்பட்டிருப்பது குறித்தும் வாங்கிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தாமும் மற்ற வாகன ஓட்டுநர்களைப் போல தனது பாதையை மட்டும் மாற்றிக்கொண்டு திரும்பிச் சென்றுவிடாமல், அந்த சாலைக்குள் மற்ற வாகனங்கள் எந்த திசையிலிருந்தும் வராமல் தடுக்கும் விதமாக சாலையின் குறுக்கே தனது டிரக்கை நிறுத்தியிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்தவர் என்பவதால் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டுள்ளார். அதேவேளையில், டிரக்கில் இருந்த அவரது மனைவி சாலையில் இறங்கி முன்னோக்கிச் சென்று வாகன ஓட்டுநர்களுக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார்.
இதனால், சாலையின் குறுக்கே டிரக் நிற்பதைக் கண்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன. பாதிக்கப்பட்ட சாலைப் பகுதியை வாகனங்கள் கடப்பது நிறுத்தப்பட்டதால், பெரியளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாங் கூறுகையில், நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. முன்னதாக, ஓரிடத்தில் பிரச்னை இருப்பதால் வாகனங்கள் முன்னோக்கிச் செல்வதை தடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் என்கிறார்.
ஆனால், பல உயிர்களைக் காப்பாற்றிய வாங் பற்றி சீன ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளது. ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு 10 ஆயிரம் யுவான் பரிசளிக்க முன்வந்துள்ளது. இதுபோல பல நிறுவனங்கள் அவருக்கு பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. ஆனால், வாங், தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
குவாங்டாங் மாகாணத்தில் கடந்த மாதம் கனமழை பெய்து பெரிய அளவில் சேதமேற்பட்ட நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சீன நாட்டின் குவாங்டாங் மாகாணம், மெய்ஷூ நகருக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையில் சுமாா் 18 மீட்டா் பரப்பு புதன்கிழமை நொறுங்கி பள்ளத்தில் சரிந்தது.
இதில், சாலையில் சென்று கொண்டிருந்த சுமாா் 20 வாகனங்கள் சரிவில் விழுந்தன. அந்த வாகனங்களில் இருந்த 48 பேர் பலியாகினர். நெடுஞ்சாலை திடீரென உடைந்து நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஏழுமலையானுக்கு மினி டிரக் நன்கொடை

இந்திய உறவு சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளியுறவு அமைச்சா்

விபத்தில்லா அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



