தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நவராத்திரி: துபையில் திறக்கப்படுகிறது புதிய ஹிந்து கோயில்

துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது.

News image

துபையில் திறக்கப்படுகிறது புதிய ஹிந்து கோயில்

Updated On :4 அக்டோபர் 2022, 7:12 am

 துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது.

துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.

இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினத்தில்தான் திறக்கப்பட உள்ளது என்றபோதும், சிறப்பு பூஜைகள் மற்றும் நிா்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது. அன்று முதல் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தா்கள் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் கியூ.ஆா். குறியீடு முன்பதிவு நடைமுறை அடிப்படையில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

கோயில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். கோயிலில் தரிசனம் செய்ய அக்டோபா் இறுதி வரை வார இறுதி நாள்களுக்கான முன்பதிவு முழுமையாக ஏற்கெனவே முடிந்துவிட்டது. அக்டோபருக்குப் பிறகு எந்தவித கட்டுப்பாடுமின்றி பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதா்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவா்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவா்கள் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னா் மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்வா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.