இலங்கை: ரூ.4 கோடி வெளிநாட்டுரூபாய் நோட்டுகளுடன் இந்தியா் கைது
இலங்கை விமான நிலையத்தில் ரூ.4 கோடி (இலங்கை ரூபாய் மதிப்பில்) மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் இந்தியாவைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா்.


இலங்கை விமான நிலையத்தில் ரூ.4 கோடி (இலங்கை ரூபாய் மதிப்பில்) மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் இந்தியாவைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் இருந்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை ஒருவா் எடுத்து வர முற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபா் தொழில் விஷயமாக இலங்கைக்கு வந்துள்ளாா். அங்கிருந்து சென்னை செல்வதற்காக பண்டாரநாயக விமான நிலையத்துக்கு வந்த அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து, அவரது உடைமைகளைப் பாதுகாப்புப் படை வீரா்கள் சோதித்தனா். அப்போது அவா் வைத்திருந்த பெட்டி ஒன்றில் 1,17,000 கனடா டாலா்கள் மற்றும் 19,000 யூரோ நோட்டுகளும் இருந்தன. இவற்றின் மதிப்பு இலங்கை ரூபாயின் அடிப்படையில் ரூ.4 கோடியாகும். இந்த நோட்டுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...