சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியாவிடமிருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் இலங்கை

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

News image
இந்தியாவிடமிருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் இலங்கை
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய போதிய டாலர்கள் இல்லாததால் நாளுக்குநாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடனுதவியை எதிர்பார்த்து இலங்கை காத்திருக்கிறது. 

சரக்குகளை இறக்குமதி செய்ய 1 பில்லியன் டாலரை இலங்கைக்கு கடனாக வழங்குவதாக இந்தியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் அமைச்சரவை கூடியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் டன் மெட்ரிக் டன் டீசலை இறக்குமதி செய்வது தொடர்பாக அக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கைக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.