நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இளைஞர்கள் புகைக்கத் தடை! 2009க்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் கிடையாது!

நியூசிலாந்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகரெட் வாங்குவதற்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:05 am

DIN

நியூசிலாந்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகரெட் வாங்குவதற்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. 

அதன்படி 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு தனது நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. புதிய மசோதாவின்படி இளைஞர்கள் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மசோதா 2009ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு மேல் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக்கூடாது எனக் கூறுகிறது. 

புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் வயதினரைக் கட்டுப்படுத்தும் வகையில், சிகரெட் வாங்க வயது வரம்பை நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

2025ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கமில்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்கும் இலக்குடன் இந்த திட்டம் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இந்த மசோதா சில்லறை விற்பனையில் சிகரெட் புழக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் என்றும், இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என்றும் நியூசிலாந்ந்து சுகாதாரத் துறை கூடுதல் அமைச்சர் ஆயிஷா வர்ரால் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் 13 வயதுக்குட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.