கிழக்கு சீனாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் 11 பேர் உயிரிழந்தனர். 102 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் அமைந்துள்ள நாந்தோங் நகரத்தில் பலத்த காற்று வீசியதால் யாங்சே டெல்டாவை வெகுவாக தாக்கியது. இதனால் அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் மக்களை வெளியேற்றி வருகின்றனர். இதுவரை 3,050 பேரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
மணிக்கு 162 கிலோ மீட்டர் (100 மைல்) வேகத்தில் காற்று வீசியதால், மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்துள்ளது. கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற இரண்டு மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும், ஒன்பது பேரைத் தேடி வருகின்றனர்.
நாந்தோங்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாலையில் விழுந்த மரங்கள், சேதமடைந்த வாகனங்கள் ஆகியவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


