/

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:40 am

உத்தரப் பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தஷார் மாவட்டத்தின் குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், பலியானவர்கள் அமர்தீப் (30), மனிஷ் (28) மற்றும் ஆகாஷ் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.

முதற்கட்ட விசாரணையில், உடற்பயிற்சி கூடத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் அறிமுகமானவர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதத்தால் இந்தத் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரி கலாநிதி நைதனி கூறுகையில், புகார்கள் மற்றும் முதற்கட்ட தகவல்களின்படி, உடற்பயிற்சிக் கூடத்தில் சில இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அப்பகுதியில் சோதனைகள் நடந்து வருகின்றன என்றார்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், இதுவரை இருவரைக் கைது செய்துள்ளதாகவும், மீதமுள்ள சந்தேக நபர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அடையாளங்களை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. விசாரணைக்காக வேறு சில நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Three persons were shot dead after a dispute broke at a gym in Khurja Nagar area of Bulandshahr district, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.