/

போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது

கனடாவில் போதைப் பொருள் கடத்திய விவகாரத்தில் பஞ்சாபை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது

Updated On :9 ஜூலை 2021, 11:56 am

கனடாவில் போதைப் பொருள் கடத்திய விவகாரத்தில் பஞ்சாபை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வாகனம் ஓட்டி வந்த பஞ்சாபை சேர்ந்த பர்தீப் சிங்(24) என்பவரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில், 112.5 கிலோ போதைப் பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 1.4 கோடி டாலர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தொடர்ந்து பஞ்சாபை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், டொரண்டோ பகுதியில் 6.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தியதாக 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதில், 9 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

மேலும், இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் 25 பஞ்சாபிகளை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.