/

நெருக்கடி சூழலில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய ஐந்து தூதரக அதிகாரிகள்!

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து இந்திய தூதரக அதிகாரிகள் திங்களன்று பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

News image

தூதரக அதிகாரிகள்

Updated On :22 ஜூன் 2020, 3:53 pm

அம்ரித்சர்: கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து இந்திய தூதரக அதிகாரிகள் திங்களன்று பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரை, போலியான குற்றசாட்டுகளின் பேரில் கடந்த 15-ஆம் தேதியன்று பாகிஸ்தானிய உளவு நிறுவனங்கள் பிடித்துச் சென்று  10 மணி நேரத்திற்கு மேலாக துன்புறுத்தியதாக, இந்திய வெளியுறவுத்  துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக  அதிகாரி சையத் ஹைதர் ஷாவை அழித்து கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

இந்நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து இந்திய தூதரக அதிகாரிகள் திங்களன்று பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஐவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லைப்பகுதி வழியாக, சாலை மார்க்கமாக இந்தியா வந்து  சேர்ந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.