இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சீன வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியாவை சீனா வலியுறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், இந்திய ராணுவமே எல்லையைத் தாண்டி வந்து, சீன ராணுவத்தைத் தாக்கியதாக பெய்ஜிங் குற்றம்சாட்டியுள்ளது என்ற தகவலை ஏ.எஃப்.பி. வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. சீன மோதலில் தமிழக வீரர் திருவாடானை பழனி வீரமரணம்
மேலும், இந்திய ராணுவம் திங்களன்று, எல்லைப் பகுதியில் இரண்டு முறை அத்துமீறி நுழைந்து, சீன ராணுவத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதாகவும், இதனால்தான் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்தியா - சீனா இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்தில் ஐந்து வீரர்கள் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதையும் படிக்கலாம்.. லடாக்கில் இந்திய - சீன ராணுவம் மோதல்: அதிகாரி உள்பட இந்திய ராணுவத்தினர் 3 பேர் பலி
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இருதரப்புப் பிரச்னைகளும் பேசி, சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும்ஒப்புக் கொண்டிருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பிரச்னை மற்றும் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட சம்பவங்களில் சுமூகமாகத் தீர்வு காண ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய ராணுவத்தில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


