மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பலி எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது இடத்தைப் பிடித்த பிரேசில் 

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதிப்பால் 1,437 பேர் பலியாகியிருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :5 ஜூன் 2020, 5:57 am

பிரேசில் நாட்டில் ஒரே நாளில்  கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,437 பேர் பலியாகியிருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

கடந்த சில தினங்களாகப் பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,437 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 34,021 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், லத்தீன் அமெரிக்க நாட்டில் வியாழக்கிழமை 30,925 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த பாதிப்பு 6,14,941 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை விடப் பிரேசிலில் நாளொன்றுக்குப் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பிரசில். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.