மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் தொடர்பாக...

News image

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டம். - படம்: கோப்பிலிருந்து...

Updated On :27 ஏப்ரல் 2026, 12:08 pm

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30 ஆம் தேதி சித்திரைத் தேரோட்டம் நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலையில் பெருமாள் உபயநாச்சியார்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு செய்தார்.

வியாழக்கிழமை, பெருமாள் சக்கரபாணி சுவாமியுடன் விஜயேந்திர மடத்தில் எழுந்தருளினார். மாலையில் வெள்ளி சூர்யபிரபையில் புறப்பாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை, வெள்ளிப்பல்லக்கில் வீதிபுறப்பாடும், இரவில் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான இரட்டை ஓலைச்சப்பரம் (பனை, தென்னை ஓலைகளால் செய்யப்பட்டது) சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலையில் பெருமாள் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளினார்.

பகலில் நூற்றுக்கால் மண்டபத்தில் திருவடி திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு இரட்டை ஓலைச்சப்பரத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி பெருமாள்கள் கருடவாகனங்களில் தனித்தனியாக எழுந்தருளினர். ஓலைச்சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.

பக்தர்கள் பெருமாளை இரட்டை கருட சேவையில் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் வெள்ளிப்பல்லக்கும், இரவு வெள்ளி ஹனுமந்த வாகனத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி சுவாமிகள் எழுந்தருளினர்.

முக்கிய நிகழ்வுகளாக ஏப்.29-இல் மாலை தங்ககுதிரை வாகனம், ஏப்.30-இல் தேரோட்டம், இரவு தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

சித்திரைப் பெரிய தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்னர் 450 டன் இருக்கும்.

தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்று விட்டம் 28 அடியும் உடையது. தேர் அலங்காரத்துக்கு பின் ஒட்டுமொத்த உயரம் 110 அடியை எட்டி, இந்தத் தேர் ஆடி அசைந்து வருவது தனி அழகுதான்.

Summary

The Chithirai chariot festival will be held at the Sarangapani Swamy Temple in Kumbakonam on April 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.