பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை அரசு தடை

இலங்கையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு..

News image
Updated On :28 ஜனவரி 2020, 9:58 am

இலங்கையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கும் முறைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது இலங்கை அரசு. 

இன்று காலை நிலவரப்படி கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கடந்த ஜனவரி 19ம் தேதி சீனாவிலிருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று இலங்கை மருத்துவத்துறையின் தொற்றுநோய் பிரிவு தலைவர் சுதாத் சுராவீரா தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் முறையை ரத்து செய்து இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இலங்கையில் புதிய கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.