பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட வாக்குப் பதிவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சாலை வலம் மேற்கொண்டது குறித்து...

News image

பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம். - ஏஎன்ஐ

Updated On :26 ஏப்ரல் 2026, 3:09 pm

கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) சாலை வலம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட பாங்காவோன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மக்களிடையே வாக்கு சேகரிப்பதற்காக சாலைவலம் மேற்கொண்டார். பாஜக தொண்டர்கள், மக்கள் பலர் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடியின் வருகையையொட்டி கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Summary

Prime Minister Narendra Modi holds a roadshow in North Kolkata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.