நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்தார்.
வேப்பமூடு சந்திப்பிலிருந்து சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொள்ளவுள்ளார்.
சாலை இருபுறமும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு கையெசைத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பூக்களைத் தூவி வரவேற்பளித்த மக்களைப் பார்த்து பிரமரும் பூரிப்பில் மகிழ்ந்துள்ளார்.
சாலை வலம் செல்லும் பிரதமர் மோடி வாகனத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Summary
Prime Minister Narendra Modi is conducting a roadshow in Nagercoil to express support for the National Democratic Alliance candidates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


