கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று(ஏப். 15) மாலை சாலை வல நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இதனால், எடப்பாடி பழனிசாமி கரூர் மற்றும் திருப்பூரில் இன்று பங்கேற்கவிருந்த பிரசாரம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார்.
தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை திடலுக்கு வருகிறார்.
அங்கிருந்து, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு காரில் வரும் பிரதமர், வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami will participate in a roadshow event alongside Prime Minister Narendra Modi in Nagercoil, Kanyakumari district, this evening (April 15).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்!

நெதர்லாந்து பிரதமருடன் பேசிய பிரதமா் மோடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


