தெஹ்ரான்: சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான் துணை அதிபரும், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருபவருமான மௌசூமே எப்தேகாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டு சுகாதாரத் துறை இணையமைச்சரும், கரோனா வைரஸுக்கு எதிரான திட்ட அமைப்பின் தலைவருமான இராஜ் ஹரீா்சியைத் தாக்கிய நிலையில், தற்போது துணை அதிபருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமைச்சர் பதவியேற்ற முதல் முஸ்லிம் பெண் ஏப்டேகர் ஆவார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானில் கரோனா வைரஸ் பாதித்த 26 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 245 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஈரானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் தங்களது எல்லைகளை மூடிவிட்டன. விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


