மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கஞ்சத்தனமானவர் என்ற காரணத்தால் பிரபல நடிகரைக் கைவிட்ட காதலி!

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ அவரை விட 39 வயது குறைவான இஸ்ரேலிய நடிகை மீட்டல் டோஹனைக் காதலித்து வந்தார். 

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 7:21 am

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ அவரை விட 39 வயது குறைவான இஸ்ரேலிய நடிகை மீட்டல் டோஹனைக் காதலித்து வந்தார். 

இந்த மாதத் தொடக்கத்தில் ஆஸ்கார் விருதுகளில் சிவப்பு கம்பள வரவேற்பில் மீட்டல் டோஹான் நடந்து சென்றபோது, அல் பசினோவைப் பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது.

அதனைத் தொடர்ந்து, அண்மையில் 79 வயதான அல் பாசினோவை, 40 வயதான மீட்டல் பிரிந்துவிட்டதாக இஸ்ரேலின் லாஷா பத்திரிகை தெரிவித்துள்ளது.

"அல் பாசினோ போன்ற வயதானவருடன் வாழ்வது மிகவும் கடினம். எங்களுக்குள் வயது இடைவெளி அதிகம்தான், ஆம். நான் அதை மறுக்க முயன்றேன், ஆனால் ஒரு வயதான மனிதர், அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும். பெருந்தன்மையுடனும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அவர் மீது மிகவும் அன்புடன் இருந்தேன். ஆனாலும் இவ்வுறவு நீடிக்கவில்லை" என்று மீட்டல் டோஹான் கூறியுள்ளார்.

இரண்டு வருட உறவின் போது அவர் என்னென்ன பரிசுகளை வழங்கினார் என்று கேட்கப்பட்ட போது அதற்கு டோஹன், "அவர் எனக்கு பூக்களை மட்டுமே வாங்கித் தருவார். அவர் ஒருபோதும் பணத்தை செலவழிக்க விரும்பவில்லை என்று நான் எப்படி பணிவுடன் சொல்ல முடியும்?" என்று கிண்டலாக பதிலளித்தார் டோஹன்.

மேலும் அவர் கூறுகையில், "இனி நாங்கள் ஒன்றாக இல்லாவிட்டாலும், அவருடன் தொடர்ந்து  நட்பில் இருக்க முடியும் என்று நம்புகிறேன்’’ என்றேன்.

"நான் அவருடன் சண்டையிட்டேன், சமீபத்தில் அவரை விட்டுப் பிரிந்து அவருடனான உறவிலிருந்து வெளியேறினேன். ஆனால் நிச்சயமாக அவரை மிகவும் நேசிக்கிறேன். தேவைப்படும்போது நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்போம். இது எனக்குக் கிடைத்த மரியாதை "இந்த உறவு எங்களுக்கிடையில் நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.