மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கோவைட்-19 ஆராய்ச்சியில் கிடைத்த மகிழ்ச்சி தரும் தகவல்

கரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவைட் - 19 தொற்று பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2020, 11:01 am


பெய்ஜிங்: கரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவைட் - 19 தொற்று பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

அதாவது, தாயிடம் இருந்து கரோனா வைரஸ் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பரவாது என்பதே அது.

தி லான்சென்ட் இதழில் இது பற்றிய  கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாய்க்கு கோவைட்-19 தொற்று இருந்தாலும், அவரது வயிற்றில் இருக்கும் கருவுக்கு இந்த வைரஸ் பரவுவது உறுதி செய்யப்படவில்லை. கடந்த 9 பிரசவங்களின் மூலம் இது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பிறந்த 36 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தைக்கு கோவைட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தொடர்பாகவும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், பல மருத்துவ தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போதே இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை என்றும் வூஹான் பல்கலையின் ஆராய்ச்சியளார் யான்சென் சாங் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், கோவைட்-19 வைரஸ் பாதித்த தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதீத கவனம் செலுத்தப்படுவதாகவும் சாங் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.