இன்று (செவ்வாய்க்கிழமை) காபூலிலுள்ள ராணுவ பல்கலைக்கழகத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஆப்கானிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"குண்டுவெடிப்பு பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட பலரை பாதித்தது. மேலும் தகவல்கள் பின்னர் ஊடகங்களுடன் பகிரப்படும்" என்று செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது" என்றார்.
"இந்த வெடிகுண்டு, காலை 7.05 மணியளவில் ராணுவ மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், மார்ஷல் பாஹிம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைய காத்திருந்த போது நடந்தது" என்று அங்கிருந்த நபர் ஒருவர் சின்ஹுவாவிடம் கூறினார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் பல எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த குண்டு வெடிப்பில் சாலையில் சென்ற வாகனங்களும் சேதமடைந்தன.
மீட்புக் குழுக்கள், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


