தைபே: தைவானில் 18வது நபருக்கு நோவல் கரோனா வைரஸ் பாதித்திருப்பதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இதுவரை ஏற்படவில்லை என்பதே.
தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் நபர், தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் ஹாங்காங் வழியாக இத்தாலிக்கு ஜனவரி 22ம் தேதி சென்று தைவானுக்கு பிப்ரவரி 1ம் தேதி ஹாங்காங் வழியாக திரும்பியுள்ளார்.
ஏற்கனவே, இவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 வயதான இளைஞருக்கு அறிகுறி எதுவும் இல்லாத நிலையிலும், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக 78 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


