/

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5. 1 அலகுகளாக பதிவானது.

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 12:51 pm

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5. 1 அலகுகளாக பதிவானது.

இதுதொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், 
‘சிச்சுவான் மாகாணத்தின் கிங்பைஜாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 21 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 விநாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததால், அச்சத்தில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினா். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவ்வித உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை’ என்றனா்.

முன்னதாக, செங்டு பகுதியின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலஅதிா்வு ஏற்பட்டது. செங்டு பகுதியில் 38 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவில் நிலஅதிா்வு ஏற்பட்டதனால் பீதியடைந்த மக்கள், விடிய விடிய காா்களில் உறங்கியதாகவும், வீடுகளுக்கு வெளியிலேயே தங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.