லண்டன்: அதிதீவிர கரோனா தொற்றுப் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட போதும், மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
பிரிட்டனின் தெற்கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவும் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில், அதிதீவிர கரோனா கண்டறியப்பட்ட பகுதியில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டத்துக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களும் பார்சல்கள் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல முடியாமல், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மறுபக்கம் சுகாதார ஊழியர்கள் பலரும் கரோனா பாதித்து அல்லது தனிமைப்படுத்துதலில் இருப்பதால் போதிய ஊழியர்கள் இல்லாமல் மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.
பிரிட்டனில் செவ்வாயன்று புதிதாக 53,135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 414 பேர் பலியாகினர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.
ஒரு செவிலியர் இது பற்றி கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் கடுமையான பணி அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது, அது முடிந்துவிட்டதாகவே நினைத்தோம். உண்மையில் நாங்கள் தற்போது கரோனாவின் மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ளோம். இது நிச்சயம் மிகக் கடினமாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


