/

ரஷிய துணைப் பிரதமருக்கு கரோனா பாதிப்பு

ரஷிய துணைப் பிரதமர் யூரி ட்ரூட்னெவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

ரஷியாவின் துணை பிரதமர் யூரி ட்ரூட்னெவ்

Updated On :13 ஆகஸ்ட் 2020, 7:57 am

ரஷிய துணைப் பிரதமர் யூரி ட்ரூட்னெவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ரஷியாவும் உள்ளது.

ரஷியாவில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் மேலாகப் பதிவாகி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் துணைப் பிரதமரான யூரி ட்ரூட்னெவுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ரஷிய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொண்ட ட்ரூட்னெவிற்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் 5,102 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகயிள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 9,02,701 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 15,231 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.