/

ஆப்கனில் குண்டுவெடிப்பு: குழந்தை உள்பட 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

News image
Four civilians killed in roadside bomb blast in Afghanistan
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

UNI

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து மாகாண காவல்அதிகாரி ஜமால் நசீர் பராக்ஸாய் கூறுகையில், 

பஞ்ச்வாய் மாவட்டத்தின் சல்கான் பகுதியில் இன்று காலை சாலையோரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் சாலையோரத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், ஐந்து குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.