பொதுவாகவே குளர்ச்சி, வெப்பம் ஆகியவற்றை நமது தோல்தான் முதலில் உணரும். பின்னர் அதை நரம்பு வழியாக மூளைக்கு கொண்டு சென்று அதற்கு ஏற்றவாறு எதிர்வினையை நமது உடல் செய்யும்.
அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செயற்கை தோல், சிலிக்கான் (silicone membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கை தோலை செல்போனில் இணைத்துக் கொண்டு, அதை அழுத்தி பிடிக்கும்போது, கோபம் என்ற உணர்ச்சியை அது வெளிப்படுத்தும். மெதுவாக வருடினால், கூச்சம் என்ற உணர்வை வெளிப்படுத்தும்.
மனிதன் – கணிணி உறவுகள் பிரிவில் இணைப்பேராசிரியர் டாக்டர் அன்னி ரௌடட் (Dr Anne Roudaut) முன்னிலையில் இந்த ஆராய்ச்சி நடந்துவருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குகள் பதிவு

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


