லண்டன்: இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தமானது பிரெக்சிட் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் சுமுகமான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யும் நிலை உருவானது.
இந்நிலையில் இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமக்கு ஒரு சிறப்பான பிரெக்சிட் ஒப்பந்தம் கிடைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கரும், 'இது நேர்மையான சமநிலையான ஓர் ஒப்பந்தம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இரு நாடுகளின் பாராளுமன்றங்களும் ஒப்புதல் தந்த பிறகுதான் பிரெக்சிட் ஒப்பந்தகம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


