/

இந்தியா சொன்ன 22 இடங்களிலும் பயங்கரவாத முகாம்கள் இல்லவே இல்லை: பாகிஸ்தான் அழிச்சாட்டியம்

இந்தியா சொன்ன 22 இடங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், அங்கு எந்த பயங்கரவாத முகாமும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2019, 8:59 am

இந்தியா சொன்ன 22 இடங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், அங்கு எந்த பயங்கரவாத முகாமும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 54 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்களுக்கும், தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கோரிக்கை வைக்குமேயானால், மேற்கண்ட 22 இடங்களையும் நேரில் பார்வையிட அனுமதிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் நடத்திய விசாரணையின் முதற்கட்ட தகவல்கள் நேற்று பகிரப்பட்டது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.