/

மசூத் அஸார் விவகாரம்: சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டைப் போட்ட சீனா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2019, 5:34 am


வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டைப் போட்ட சீனா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைக் காப்பாற்றும் பொறுப்பு அல்ல, பாகிஸ்தானை பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதே சீனாவின் பொறுப்பாகும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அதிகாரி கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தன. ஆனால், இந்த முடிவுக்கு சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, முட்டுக்கட்டை போட்டதால், 4வது முறையாக இந்தியாவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.